|
அனர்த்த நிவாரணப் பொருட்களை சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான வசதி நடவடிக்கை
இலங்கையில் டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட பேரழிவினைத் தொடர்ந்து, இலங்கையின் மீள்கட்டமைப்புக்கான நன்கொடைகளை அளித்த அனைவருக்கும், இலங்கை தூதரகமானது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. பொருளுதவி தொடர்பான பலரது விசாரணைகள் மற்றும் வேண்டுகோளுக்கு அமைவாக, தூதரகமானது அனர்த்த நிவாரணப் பொருட்களை சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு எதிர்வரும் நாட்களில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இனங்காணப்பட்ட பொருட்கள் மாத்திரம் இந்நிவாரண பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமானது. இப்பட்டியலை https://donate.gov.lk/urgent-relief-supplies-needed-for-sri-lanka/ எனும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். எவரேனும் நிவாரணப் பொருட்களை வழங்க விரும்பினால், தாங்கள் தூதரகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் திங்கட்கிழமை 29 ஆம் திகதி டிசம்பர் 2025 மதியம் 12 மணிக்குள் ஒப்படைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தூதரகமானது இடர்முகாமைத்துவ நிலையத்தினால் குறிக்கப்பட்டுள்ள பொருட்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளும் என்றும், அதனால் தாங்கள் அப்பொருட்களை மாத்திரம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிவாரணப் பொருட்களை ஒப்படைப்பதற்கு முன், இச்செயற் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட கீழ்காணப்படும் தொலைபேசி எண்களில் ஒன்றிற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. +41779384435 (சிங்களம்/ ஆங்கிலம்) +41779098969 (தமிழ் / ஆங்கிலம்) இந்த முக்கியமான தருணத்தில் தங்களின் தாராளமான ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. இலங்கைக்கான தூதரகம் சுவிட்சர்லாந்து 19 டிசம்பர் 2025
|

